Monday, November 8, 2010

உஷார் பக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

1, தெரியாதவர்களிடம்  ஒன்றும் வாங்க வேண்டாம்.
2. தெரியாதவர்களை வீட்டிம் முக்கிய இடங்களில் அனுமதிக்காதிர்.
3. பொறுக்கப்போய் லட்சம் போச்சு

1. திரிசூலம் : சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினைவிமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில்நூதன முறையில் மார்பகத்தில் வைத்து ஹெராயினை கடத்த முயன்ற ஆந்திர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் ஏர் - இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ராஜலட்சுமி (42) என்ற பெண்ணை சோதனை நடத்திய போதுஅவரது மார்பகத் தோற்றம் வித்தியாசமாக தெரிந்தது. மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீசாரைக் கொண்டுஅப்பெண் தனி அறையில் சோதனையிடப்பட்டார். அப்போதுஅவரின் மார்பக பகுதியில்உள்ளாடைக்குள் 300 கிராம் ஹெராயினை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய். ராஜலட்சுமியின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்துவிசாரணை நடத்தினர். அப்போது, "விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு நபர், "இந்த பொருளை மலேசியாவில் ஒப்படைத்தால் பணம் தருவார்கள். மறைத்து வைத்து எடுத்துச் செல்,' என்றார். அவர் யார் என்று எனக்கு தெரியாது,' என்றார். இருப்பினும்ராஜலட்சுமியை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்ஹெராயின் கடத்தலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 -------------------------------------------------------------
2. சென்னை:தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஏமாற்றிலேப்-டாப் மற்றும் 10 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.வளசரவாக்கம் பாரதி சாலையில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் லாவண்யா(25). ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவர்தனியார் அலுவலகம் ஒன்றில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அறையில் இருந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க பெண் அங்கு வந்தார்.அந்தப் பெண் லாவண்யாவிடம், "வெளியூரிலிருந்து வருகிறேன். அவசரமாக உடைமாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
ஐந்து நிமிடம் அறையில் அனுமதித்தால் உடைமாற்றிக் கொண்டு சென்று விடுவேன்என கூறியுள்ளார்.அதற்கு லாவண்யா அனுமதித்தார். அந்தப் பெண்சில நிமிடங்களில் உடை மாற்றிக் கொண்டு சென்று விட்டார். அதன்பின்அறைக்குள் லாவண்யா சென்று பார்த்தபோது அங்கிருந்தலேப்-டாப், 10 சவரன் நகைகள் ஆகியவை மாயமாகி இருந்தது.லாவண்யா கொடுத்த புகாரின் பேரில்வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----------------------------------------------------------
3. பொறுக்கப்போய் லட்சம் போச்சு

சாலையில் சிதறிக்கிடந்த 10 ரூபாய் நோட்டுக்களை எடுக்க ஆசைப்பட்டுகாரில் வைத்திருந்த கம்பெனி பணம் மூன்று லட்ச ரூபாயை பறிகொடுத்தார் ஒருவர். கவனத்தை திசை திருப்பிபணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள்சமீப காலமாக நகரில் தொடர்கிறது. கிரானைட் கம்பெனியில் வேலை செய்பவர் சுனில் மனோகர். கம்பெனிக்கு சொந்தமான மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக வீட்டில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள கோவில் முன் காரை நிறுத்தினார். காரில் இறங்க முயன்றபோது, 20 வயது உள்ள ஒரு இளைஞர், "சார்கீழே பணம் சிதறியிருக்கிறதுஉங்களுடையதா'என்று கூறினார். கவனம் சிதறிய சுனில்காரை விட்டு இறங்கிஅந்த 10 ரூபாய் நோட்டுகளை பொறுக்கினார். ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு காரின் முன் கதவை மூட திரும்பினார். அப்போதுகாரில் பின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் சீட்டில் வைத்திருந்த பணம் அடங்கிய சூட்கேஸ் இல்லாதது தெரியவந்தது. இளைஞனையும் காணவில்லை. திட்டமிட்டு தன் கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்து கொண்டு மறைந்து விட்டான் என்பதை சுனில் உணர்ந்தார். பணத்தை பறிகொடுத்த சுனில் போலீசில் புகார் அளித்தார். 
போலீஸ் திருடனை தேடி வருகிறது. இந்த திருட்டு குறித்து போலீசார் கூறுகையில், "இந்த மாதிரி திருட்டுகள் நகரின் பல பகுதிகளில் நடந்து வருகின்றன. பணம் கொண்டு செல்லும் நாம் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சட்டையில் மண்ணை தூவி விட்டு அல்லது ரோட்டில் நோட்டுகளை வீசி நமது கவனத்தை சிதறச் செய்து பணத்தை கொள்ளை அடித்துச் செல்லும் திருட்டுக்கும்பல்கள் நகரில் அலை கின்றனஎன்றனர்.

No comments:

Post a Comment