கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மாசுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்…
“கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…”
“பீட்ஸா, பர்கர், சோளாபட்டூரானு ஊர், பேர் தெரியாத விதவிதமான சமையல் ரெசிபிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாலும், காலகாலமா நம்ம கிராமத்து அடுப்புகள்ல கொதிச்சுக்கிட்டிருக்கற எளிமையான சமையலுக்கு இருக்கற ருசி… அது கொடுக்கற திருப்தி… வேற எங்கயுமே கிடைக்காது. நீங்களும் இதையெல்லாம் செஞ்சு பாருங்க… வீடே வயிறார உங்களைப் பாராட்டும்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார் பத்மா.
செய்முறை: சோளத்தை ரவையாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும்… கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.
செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
செய்முறை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
செய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
செய்முறை: 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும். சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.
செய்முறை: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
செய்முறை: பிடிகருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, மசித்த கிழங்குடன் சேர்த்து, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும்.
செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் காய்-பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.
செய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
செய்முறை: கொத்தவரங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். இதை வேக வைத்த கொத்தவரங்காயில் விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்தவரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
செய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்.