Monday, December 20, 2010

பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் - விக்கிலீக்ஸ்

Posted by PUTHIYATHENRAL at 9:37 PM
 விக்கிலீக்ஸ் : இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்பபில்லை என்றும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  

Thanks to : http://sinthikkavum.blogspot.com/2010/12/blog-post_2448.html

Saturday, December 18, 2010

ஒரு நாள் வரும்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

ஒரு நாள் வரும்

அன்று!!!!!!!!!!!!!!!!!!

நீ குளிக்க மாட்டாய் , உன்னை குளிப்பாட்டுவார்கள்.

நீ உடை அணிய மாட்டாய் !  உனக்கு அனுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !  உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !  உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !  உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு , உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.

அது எந்நேரமும், எங்கிருந்தாலும், வந்து விடும், அது தான் மௌவுத் (மரணம்)

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்னதீமைகள் என்னசீர்திருத்தப்பட வேண்டியது என்னஅதிகப்படுத்த வேண்டியதுதவிர்ந்து கொள்ள வேண்டியது என்னஎன்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

1.  அதிகாலைத் தொழுகையைஅதன் குறித்த நேரத்தில்கூட்டாக இணைந்துபள்ளியில் தொழுதீர்களா?2.  ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்துமுதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?3.  இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?4.  ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?5.  தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?6.  தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?7.  மரணத்தையும்மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?8.  மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும்அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?9.  யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ்என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால்அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ்அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
10. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?11. தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?12. தேவையில்லாத அதிகமான சிரிப்புஅதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?13. செவிப்புலனையும்பார்வையையும்சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்குதினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?14. இன்றைய தினம் ஏழைகளுக்கும்தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?15. உங்களின் (தவறுகளின்) மீதும்அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?16. பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?17. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?18. ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?19. நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும்இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?20. இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களாஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோஅவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
21. மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?22. உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?23. இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடுபுதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?24. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும்பெண்களுக்கும்உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களாஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
25. இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?26. உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?27. மக்களையும்உங்களது குடும்பத்தாரையும்உங்களது சகோதரசகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?28. உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?29. இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்துஅதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம்அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?30. யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""
31. இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?32. மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""
33. யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றிஉன் பொருத்தத்தை அடைத்துஅந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக


ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌. நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. 

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
 அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். 

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். 

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். 

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். 

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், 

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், 

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது. 

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

loadingடிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாம்.                         
loading
தகவல் தேடி தந்தவர்:

Mohammad Sultan
 நன்றி: பதிவு தொகுப்புகள்

Friday, December 10, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள்அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). ஈராக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம்.


விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை 'நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்" என்று டிவிட்டியது தான். ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு "எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக" என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.


அடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.அனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, 'காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?".. பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது "collateral murder". விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.


யாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில்?. எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற "reuters' செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது.


ஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, எடுத்தது யார், விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார் ? இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் 'தன் கையே தனக்கு உதவி' முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது... அடுத்த பகுதியில்...

"எங்களை முடக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், விக்கிலீக்ஸ் தளத்தினை மென்மேலும் பலப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் உதவி" - ஜூலியன்


Monday, November 29, 2010

பையை நிரப்பும் காசைவிட

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

அமெரிக்க மோகத்துடன் சென்ற இந்தியர்கள் தங்களது வேலைகைநிறைய சம்பளம் போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு குடும்ப உறவுக்கும்பாசத்துக்கும் ஏங்கி தாய் நாடு திரும்பும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. என் மகள் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறாள்’, ‘மகன் இன்ஜினியராக இருக்கிறான்’ என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர்கள் அந்தக்காலம் தொட்டு இந்த காலம் வரை இருக்கிறார்கள். பல இளைஞர்கள்இளைஞிகளின் கனவும் அமெரிக்கா செல்வதாகவே இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு  இயந்திரமயமான வாழ்க்கையில் உழன்ற பலர் உறவுபாசம்கலாசாரம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்நாட்டு பிணைப்பை இழந்து விட்டது போல் உணருகின்ற பலரும் அவசர அவசரமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.1990ம் ஆண்டு தனது 23ம் வயதில்  ஐதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்றவர் கவுதம். பட்ட மேற்படிப்புமல்ட்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் உயர் பதவிகைநிறைய சம்பளம்அமெரிக்க சிட்டிஷன்சிப்புடன் பிறந்த குழந்தை என கடந்த 18வருடமாக அமெரிக்கவாசியாகவே வாழ்ந்தார். அந்த வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு திடீரென சொந்த ஊர் திரும்பினார். அண்ணன்அண்ணிமாமாஅத்தைசித்தப்பாசித்தி என உறவுகளோடு வந்து கண்ணீரோடு கலந்து விட்டார்.

‘‘பையை நிரப்பும் காசைவிட குடும்ப உறவுகள்தான் நம் மனதை ஆள்கிறது. சதா ஊர் ஞாபகம் வருகிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஊரில் இந்நேரம் நம் உறவுகள் என்ன செய்யும்அவளுக்கு கல்யாணமாமே.. இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறதாமே.. என்ற தகவல்கள் ஏதோ ஒருவகையில் நாம் அங்கு இல்லாததை ஒரு இழப்பாக கருதச் செய்கிறது. பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் அதை இப்போது இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம். அதனால் நான் இந்தியா திரும்பிவிட்டேன்’’ என்கிறார் கவுதம். அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர் டாக்டர் பி.ரகுராம். வசதிவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு திடீரென்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் மார்பக அறுவை சிகிச்சை மையங்கள் இல்லை என்று உணர்ந்தேன். அந்த சேவையை நம் மக்களுக்கு வழங்கும் லட்சியத்துடன் ஊர் திரும்பி விட்டேன். என் தாயார் பெயரில் மருத்துவமனை தொடங்கி 3ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் முழு திருப்தி கிடைத்திருக்கிறது’’ என்றார். அதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரமதி ரெட்டி (அப்பல்லோ மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட்) கூறும்போது, ‘‘13 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து தம்பாபுளோரிடா பகுதிகளில் மருத்துவ தொழில் செய்தேன். அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். நமது கலாசாரம்குடும்ப பந்தம்பாசங்கள் நிறைந்த உறவுக்கான சூழ்நிலையில் எனது குழந்தையை வளர்ப்பதற்காக ஊர் திரும்பினேன்’’ என்றார்.

டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இன்ஜினியர்கள்இந்தியா திரும்பினால் நிறைய சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம் கொண்ட உயர் அதிகாரிகள்வசதியான வாழ்க்கை இந்தியாவில் கிடைக்காது என்று எண்ணுபவர்கள்கூட மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் அதிபர்களும், ‘‘அங்குள்ள மார்க்கெட் நிலவரம் மங்கி வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி தாய் மண்ணுக்கான வீரியம் எங்கிருந்தாலும் ’ என்று கூறி தங்கள் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு இங்கு வந்து வர்த்தகத்தை தொடங்கிவிட்டனர். நிதிமுதலீடு தொழில் நடத்தி வந்த மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘18 வருடம் அமெரிக்காவில் நிறுவனம் நடத்தி வந்தேன். இப்போது அதற்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்தியா திரும்பிஇங்கே கம்பெனி தொடங்கி விட்டேன். மைக்ரோ சாஃப்ட் துறையில் புகழ்பெற்று விளங்கும் எனது கணவரும் தனது டீமுடன் இந்தியா திரும்பி  நிறுவனத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் இப்படியொரு மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது’’ என்றார்.

காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு


'காஸ் சிலிண்டரை எடை போட்டு காண்பித்துடெலிவரி செய்ய வேண்டியது காஸ் ஏஜென்சியின் கடமை. அதை எடை போட்டு வாங்குவது நமது உரிமைஎன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தயானந்தன்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் இவர்.
'
சிலிண்டரை எடை போட்டுக் கொடுத் தால்தான் வாங்குவேன்இல்லாவிட்டால்,அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சொல்லிப் பாருங்கள். சில மணி நேரத்திலேயே எடை போடும் கருவியோடு டெலிவரி செய்வர்என்கிறார்.
இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால்இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோர்எடை போட்ட பிறகே சிலிண்டரை பெறுகின்றனர். பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட கூடுதலாக கொடுப்பதும் இல்லை.
'
பொதுவாக சிலிண்டர் எடை 15 கிலோ முதல் 16 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எடை மாறுபடும். அதன் அளவு கைப்பிடி வளையத்தை தாங்கும் பட்டையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
காஸ் எடை 14.2 கிலோ இருக்கும். இது 200 கிராம் வரை எடை கூடவும் செய்யும்;குறையவும் செய்யும். சிலிண்டர் எடைகாஸ் எடை சேர்ந்து மொத்தம் 30 கிலோ இருக்கும். இதை கணக்கிட்டாலே காசின் எடை குறைவாக உள்ளதாஇல்லையா என எளிதாக கண்டறிய முடியும்என்கிறார் தயானந்தன்.
காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு தரும் டிப்ஸ்....
'
சிலிண்டர் கொண்டு வந்ததும் அதில் வால்வு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின், 'லீக்ஆகிறதா எனஸ்டவ்வை எரியவிட்டு பார்க்க வேண்டும். ஒருவேளை, 'லீக்ஆனால்,உடனடியாக வால்வு பகுதியை மூடிவிட்டுதிறந்தவெளியில் சிலிண்டரை வைக்க வேண்டும். இடைபட்ட நேரத்தில் எந்த சுவிட்சையும் அழுத்தக்கூடாது. ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்என்கிறார். விற்கிற விலையில்காசை முறையாகவும்,சிக்கனமாகவும் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்லபொருளாதார சிக்கனமும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்..

large_135684.jpg
வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும்
இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும்
பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள்
குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை
திருப்ப வேண்டியது அவசியமாகும்.உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும்,
நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப
வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும்,
இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே
குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில்
முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி
மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர்
தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில்
இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது
மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக
பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக
பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின்
நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக்
கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு,
அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர்
பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல்
தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட்
மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள்,
"ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள்
செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்
கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது.
இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும்
பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது
அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து
வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும்,
வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய
முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை
வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால்
கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம்
பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில்
இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை
எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார்
விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர்
கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன.
இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை
விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ,
பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை
விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும்
போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால்,
மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை
பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது
கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால்
தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட்
பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை
தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும்
பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு
சுதாகர் கூறினார்