Monday, November 29, 2010

பையை நிரப்பும் காசைவிட

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

அமெரிக்க மோகத்துடன் சென்ற இந்தியர்கள் தங்களது வேலைகைநிறைய சம்பளம் போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு குடும்ப உறவுக்கும்பாசத்துக்கும் ஏங்கி தாய் நாடு திரும்பும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. என் மகள் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறாள்’, ‘மகன் இன்ஜினியராக இருக்கிறான்’ என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர்கள் அந்தக்காலம் தொட்டு இந்த காலம் வரை இருக்கிறார்கள். பல இளைஞர்கள்இளைஞிகளின் கனவும் அமெரிக்கா செல்வதாகவே இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு  இயந்திரமயமான வாழ்க்கையில் உழன்ற பலர் உறவுபாசம்கலாசாரம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்நாட்டு பிணைப்பை இழந்து விட்டது போல் உணருகின்ற பலரும் அவசர அவசரமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.1990ம் ஆண்டு தனது 23ம் வயதில்  ஐதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்றவர் கவுதம். பட்ட மேற்படிப்புமல்ட்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் உயர் பதவிகைநிறைய சம்பளம்அமெரிக்க சிட்டிஷன்சிப்புடன் பிறந்த குழந்தை என கடந்த 18வருடமாக அமெரிக்கவாசியாகவே வாழ்ந்தார். அந்த வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு திடீரென சொந்த ஊர் திரும்பினார். அண்ணன்அண்ணிமாமாஅத்தைசித்தப்பாசித்தி என உறவுகளோடு வந்து கண்ணீரோடு கலந்து விட்டார்.

‘‘பையை நிரப்பும் காசைவிட குடும்ப உறவுகள்தான் நம் மனதை ஆள்கிறது. சதா ஊர் ஞாபகம் வருகிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஊரில் இந்நேரம் நம் உறவுகள் என்ன செய்யும்அவளுக்கு கல்யாணமாமே.. இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறதாமே.. என்ற தகவல்கள் ஏதோ ஒருவகையில் நாம் அங்கு இல்லாததை ஒரு இழப்பாக கருதச் செய்கிறது. பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் அதை இப்போது இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம். அதனால் நான் இந்தியா திரும்பிவிட்டேன்’’ என்கிறார் கவுதம். அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர் டாக்டர் பி.ரகுராம். வசதிவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு திடீரென்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் மார்பக அறுவை சிகிச்சை மையங்கள் இல்லை என்று உணர்ந்தேன். அந்த சேவையை நம் மக்களுக்கு வழங்கும் லட்சியத்துடன் ஊர் திரும்பி விட்டேன். என் தாயார் பெயரில் மருத்துவமனை தொடங்கி 3ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் முழு திருப்தி கிடைத்திருக்கிறது’’ என்றார். அதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரமதி ரெட்டி (அப்பல்லோ மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட்) கூறும்போது, ‘‘13 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து தம்பாபுளோரிடா பகுதிகளில் மருத்துவ தொழில் செய்தேன். அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். நமது கலாசாரம்குடும்ப பந்தம்பாசங்கள் நிறைந்த உறவுக்கான சூழ்நிலையில் எனது குழந்தையை வளர்ப்பதற்காக ஊர் திரும்பினேன்’’ என்றார்.

டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இன்ஜினியர்கள்இந்தியா திரும்பினால் நிறைய சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம் கொண்ட உயர் அதிகாரிகள்வசதியான வாழ்க்கை இந்தியாவில் கிடைக்காது என்று எண்ணுபவர்கள்கூட மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் அதிபர்களும், ‘‘அங்குள்ள மார்க்கெட் நிலவரம் மங்கி வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி தாய் மண்ணுக்கான வீரியம் எங்கிருந்தாலும் ’ என்று கூறி தங்கள் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு இங்கு வந்து வர்த்தகத்தை தொடங்கிவிட்டனர். நிதிமுதலீடு தொழில் நடத்தி வந்த மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘18 வருடம் அமெரிக்காவில் நிறுவனம் நடத்தி வந்தேன். இப்போது அதற்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்தியா திரும்பிஇங்கே கம்பெனி தொடங்கி விட்டேன். மைக்ரோ சாஃப்ட் துறையில் புகழ்பெற்று விளங்கும் எனது கணவரும் தனது டீமுடன் இந்தியா திரும்பி  நிறுவனத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் இப்படியொரு மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது’’ என்றார்.

காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு


'காஸ் சிலிண்டரை எடை போட்டு காண்பித்துடெலிவரி செய்ய வேண்டியது காஸ் ஏஜென்சியின் கடமை. அதை எடை போட்டு வாங்குவது நமது உரிமைஎன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தயானந்தன்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் இவர்.
'
சிலிண்டரை எடை போட்டுக் கொடுத் தால்தான் வாங்குவேன்இல்லாவிட்டால்,அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சொல்லிப் பாருங்கள். சில மணி நேரத்திலேயே எடை போடும் கருவியோடு டெலிவரி செய்வர்என்கிறார்.
இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால்இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோர்எடை போட்ட பிறகே சிலிண்டரை பெறுகின்றனர். பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட கூடுதலாக கொடுப்பதும் இல்லை.
'
பொதுவாக சிலிண்டர் எடை 15 கிலோ முதல் 16 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எடை மாறுபடும். அதன் அளவு கைப்பிடி வளையத்தை தாங்கும் பட்டையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
காஸ் எடை 14.2 கிலோ இருக்கும். இது 200 கிராம் வரை எடை கூடவும் செய்யும்;குறையவும் செய்யும். சிலிண்டர் எடைகாஸ் எடை சேர்ந்து மொத்தம் 30 கிலோ இருக்கும். இதை கணக்கிட்டாலே காசின் எடை குறைவாக உள்ளதாஇல்லையா என எளிதாக கண்டறிய முடியும்என்கிறார் தயானந்தன்.
காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு தரும் டிப்ஸ்....
'
சிலிண்டர் கொண்டு வந்ததும் அதில் வால்வு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின், 'லீக்ஆகிறதா எனஸ்டவ்வை எரியவிட்டு பார்க்க வேண்டும். ஒருவேளை, 'லீக்ஆனால்,உடனடியாக வால்வு பகுதியை மூடிவிட்டுதிறந்தவெளியில் சிலிண்டரை வைக்க வேண்டும். இடைபட்ட நேரத்தில் எந்த சுவிட்சையும் அழுத்தக்கூடாது. ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்என்கிறார். விற்கிற விலையில்காசை முறையாகவும்,சிக்கனமாகவும் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்லபொருளாதார சிக்கனமும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்..

large_135684.jpg
வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும்
இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும்
பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள்
குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை
திருப்ப வேண்டியது அவசியமாகும்.



உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும்,
நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப
வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும்,
இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே
குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில்
முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி
மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர்
தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில்
இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது
மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக
பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக
பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின்
நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக்
கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு,
அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர்
பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல்
தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட்
மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.



குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள்,
"ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள்
செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்
கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது.
இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும்
பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது
அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து
வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும்,
வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய
முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை
வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால்
கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம்
பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில்
இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை
எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார்
விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர்
கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன.
இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை
விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ,
பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை
விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும்
போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால்,
மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை
பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது
கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால்
தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட்
பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை
தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும்
பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு
சுதாகர் கூறினார்

Friday, November 26, 2010

IDB offers interest-free loan to Muslims for medical, engg courses

Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for scholarship cum interest-free education loan from meritorious but financially needy Indian Muslim students to help them to pursue professional courses such as Medical and Engineering.

This loan is for those students who have taken admission or intend to in academic year 2010-2011 in the first year of any degree courses of Medicine and Engineering including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration andBachelor of Law.

To get this loan it is necessary that aspirants should have obtained 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics in 10th class examination.

The applicants will be interviewed by a selection committee and selected ones will be provided with the cost of living, clothing, books, tuition fees and medical expenses during the courses.

It is to be noted here that as it is an interest-free loan, recipients, therefore, will have to refund the amounts in easy installments after they settle down in profession. So that others can get benefit to enjoy the same educational opportunity.

Islamic Development Bank started this program in 1983 to promote professional education among Muslim community in various countries including India. In India this program is operated and monitored through Delhi based NGO Students Islamic Trust (SIT). So far 1163 students completed their courses and settled down in their professions with the help IDB loan. At present there are 645 students who are getting benefits from it and pursuing professional studies.

Talking to TwoCircles.net from Delhi, Mohammad Saifullah Rizwan, Executive Secretary of SIT, said: “It is a golden opportunity for the talented Muslim students who are unable to do professional courses due to financial problem. The students who passed matriculation with minimum 60% marks and have desire to go in professional fields should get benefit from this program.â€�

On number of students who will be selected this year he said: “We will select 250 students through interview. The Selection committee formed for this purpose will interview the applicants in almost all the states, then we will issue the list of selected students.�

Asked about amount that will be given to the selected students he told: “Each student of Medical is given Rs.45000/ and student of Engineering is given Rs. 40000/ per month till they complete the courses.

“They will have to return the amounts they receive from IDB after the completion of courses or after they get settlement in their profession so that it can pave the way for other students belonging to the same category and who want to do similar courses� he added.

The last date for submission of application is 25th August 2010. Application forms can be downloaded from SIT website http://www.sit- india.org/ scholarship. html or it can be obtained from SIT office.

Address:

Mohammad Saifullah Rizwan

Executive Secretary

The Student Islamic Trust

Abul Fazal Enclave, Jamia Nagar

New Delhi-110025

Contact: 91-9990630127, 91-11-26941028

Saturday, November 20, 2010

பெரிதாக குறிவை
பெரிதாக குறிவை என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை  விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும்மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.
நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படிமலை ஏறும் விளையாட்டு வீரன்டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையாஅப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத்தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதைநினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதையவலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம்உழைப்புஎல்லாமே வீண். அது மட்டுமல்லபெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும்தவறவிடுகிறீர்கள்!
மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப்பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!
இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

  •  
    • வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
    • ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
    • டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லைஅவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள்.
      நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாகநாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாதுஅப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.
மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை;மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும்என்ற சவால் தோன்றியவுடன்அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.
தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.
வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.
வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.






Al Quran -[40:39]"O my people! This life of the present is nothing but (temporary) convenience: It is the Hereafter that is the Home that will last  

Tuesday, November 16, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
 பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
 இதுகுறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
 தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
 விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.