Friday, November 5, 2010

உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமான மக்களால்
வெறுக்கப்படுகின்ற நாடாகவும் விளங்குகின்ற அமெரிக்க நாட்டின் அதிபர்
பராக் ஒபாமா இந்தியாவுக்கு இந்த வார இறுதியில் வருகை தருகின்றார். அவரின்
வருகையை அறிவுஜீவிகளும், அமைதியையும், மனித நேயத்தையும் நேசிக்கின்ற
அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். ஏனெனில் இலட்சக்கணக்கான
அப்பாவி மக்களின் உயிரை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க
கூட்டுப்படைகள் பலி வாங்கியிருக்கின்றன. மேலும் கூடுதல் படைகளை
ஆப்கானிஸ்தானத்திற்கு ஒபாமா அனுப்பி வைத்திருக்கிறார். அங்கே தினமும்
நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து தனது ஆதரவை மத்திய கிழக்கின் போக்கிரி
நாடான இஸ்ரேலுக்கு வழங்கி பலஸ்தீன மக்களுக்கு எதிராக பெரும்
அட்டூழியங்கள் செய்வதற்கு உதவி வருகிறது. ஈரான், சிரியா, லிபியா, வட
கொரியா என பல நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது. போரின்
மூலமாக ஈராக்கை நிர்மூலமாக்கி விட்டு இப்போது ஈரானுக்கு எதிராக போர்
தொடுக்க தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறது. அமெரிக்கா என்றால், மனித
குலத்தின் முதல் விரோதி என்பது இன்று ஒரு சிறுபிள்ளைக்கும் நன்கு
தெரியுமளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் நடந்து கொள்கிறது.

இவ்வாறு உலகின் மிகப்பெரிய அழிவு சக்தியாக இருக்கும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்து அவரை
முகமலர்ச்சியுடன் வரவேற்கின்ற வைகோவின் நடவடிக்கை அமெரிக்க சி.ஐ.ஏ வின்
கைக்கூலியாக வைகோ மாறிவிட்டார் என்ற சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.
உலகின் பல நாடுகளை தனது அதிகார வெறிக்கு தொடர்ந்து இரையாக்கும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அதிபர் ஒபாமாவின் வருகையை ஆதரிக்கும் வைகோவை தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவர்.
tntj

No comments:

Post a Comment