Monday, February 21, 2011

Ilavasa Tvபுதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.விஎன்பது பொழுதுபோக்கு சாதனம்தான்ஆனால் அதைவிட
முக்கியமானது உணவுஉடைஉறைவிடம்தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றனஇவை தன்னிறைவு அடைந்து விட்டனவாகுறிப்பாகவிவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்டி.விவழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம்தரமான
மருத்துவம்கல்விமும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வுஎரிபொருள் விலை உயர்வுகுடிநீர் பற்றாக்குறைலஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.விபார்க்க முடியும்எனவே எனக்கு இந்த டி.விவேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும்மரியாதையும்அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும்அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும்இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயிவிவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலைநாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறதுராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டுஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.விஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்கதமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.விகொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும்வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.விபாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும்எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்ல


Tuesday, February 8, 2011


கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!


Ladys finger reduces cholesterol - Food Habits and Nutrition Guide
 in Tamil
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
வரலாறு:
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
வகைகள்:
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
விசேஷ குணம்:
வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
வாங்குவது எப்படி?:
இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.
பாதுகாப்பு:
ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
சமைக்கும் போது கவனிக்க:
இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.
மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து:
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.
                        

Thursday, January 20, 2011

மத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை அறிவிப்பு


மத்திய அரசு வழங்கும் கல்லூரி  மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள்  துறை நேற்று அறிவித்தது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள  செய்தி,
கல்லூரி பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. 2010-2011 ம் கல்வி ஆண்டில் அரசால் அங்கீகரிகப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மாணவ- மாணவிகள் உதவி தொகை பெற விண்ணபிக்கலாம்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/- மும் முதுகலை படிப்பு படிக்கும் போது  மாதம் ரூபாய் 2000/- மும் வழங்கப்படும்.  மருத்துவம் மற்றும் எஞ்சினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பாக இருந்தால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/-மும், எஞ்சிய ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 2000/-மும் பெறலாம் . ஒரு கல்வி ஆண்டில் பத்து(10) மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
மாநில பள்ளி தேர்வு வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4883 ஆகும். இதில் 50% மாணவர்களுக்கும், 50% மாணவிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட +2தேர்வில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப  ஆண்டு வருமானம் 4,50,000குள் இருக்க வேண்டும் .
+2 தேர்வு எண்ணை  தேர்வுத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றவர்கள்  மட்டுமே விண்ணப்பதை டவுன்லோட் செய்ய முடியும். விண்ணப்பதை தேதி முதல் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் இம்மாதம் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இணை இயக்குனர்(மேல்நிலை)
அரசு தேர்வுகள் இயக்கம்
டி.பி.ஐ வளாகம்
டி.பி.ஐ கல்லூரி சாலை,
சென்னை-600 006
அவ்வாறு அனுப்பும் தபாலின் மேல் ” கல்லூரி -பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டம்-” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தபால் துறை  மூலம் மட்டுமே விண்ணப்பங்களை  சமர்பிக்க வேண்டும்

PNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய


பயணிகள் தங்கள் 10 இலக்க PNR எண்ணைக் குறிப்பிட்டு, 97733 00000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் மொபைல் போனுக்கு நிமிடத்தில் வந்து சேரும். இந்த வசதியை இந்திய ரயில்வேயுடன் இணைந்து கூகிள் வழங்குகிறது. 97733 00000என்ற Mobile எண்ணுக்கு SMS மட்டும் அனுப்பினால் போதுமானது. 0 அல்லது +91 என்ற எண்கள் சேர்த்து அனுப்பத் தேவையில்லை.  இந்த சேவைக்கு சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான சாதாரண கட்டணம்தான். அதிகபட்சம் ரூபாய் 1 மட்டுமே.

சிறுபான்மை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி


MS Office with C ,C++, MS Office with Tally, 10 -வது பாஸ்/பெயில் ஆன
10500  பேருக்கு 
.Tamilnadu Minorities Economic DevelopmentCorporation, and
807, Anna Salai, 5th Floor, Chennai 600 002.
நேரிலோ தபால் மூலமோ 
www.tamco.in, இணைய தளத்திலும்விண்ணப்பங்களை                                                                                                                                                  amp; nbsp;                                    Backward Classes .and Minorities Welfare Department
தொலைபேசி எண்:04365 -251562  ல் பெறலாம் .
--குடந்தை பேராசிரியர் உசேன் .

Thursday, January 13, 2011

சுவாமி அசீமனந்தாவின்  மனம் மாற்றிய அப்துல் கலீம்:
கடந்த 2007-ம் ஆண்டில் 68 பேரின் உயிரைப் பலிகொண்ட  சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்  ரயில் குண்டு வெடிப்பு சம்பவம்  நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மாலேகன் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தை - நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் அப்துல் கலீம் என்ற 21 வயது முஸ்லிம் வாலிபர் என்பதை எத்தனை பேர் அறிவோம்?.  
சுவாமி அசீமானந்தா நவம்பர் 2010-ல் மக்கா மஸ்ஜித் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர மநிலம் ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்குடா மாவட்ட சிறைச்சலையில் அடைக்கப்பட்ட பொழுது அந்த வியத்தகு சம்பவம் நடந்தது. அவர் அடைக்கப்பட்ட சிறையில்தான் - மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட  அப்துல் கலீமும் அடைக்கப்பட்டிருந்தார். ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பரிச்சயம் நட்பாக மாறியது. 
அப்துல் கலீம் - வயோதிகரான சுவாமிக்கு தேவையான உணவு- குடிநீர் பொன்றவைகளை பெற்றுத் தந்து  உதவி வந்தார். அவ்வாறு உதவி வந்த இளைஞனிடம் ஏதேச்சையாக ஒருநாள் கலீமின் சிறைத்தண்டனைக்கு காரணம் என்னவென்று சுவாமி ஒருநாள் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞன் அளித்த பதில்தான் - சங்பரிவாரால் மழுங்கடிக்கப்பட்ட 'மனிதநேய' உணர்வை மீண்டும் அந்தச்சுவாமியில் மனதில் கிளர்ந்தெழச் செய்தது.
அப்துல் கலீம், தான் கடந்த ஒன்றரை அண்டு காலமாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டு -  கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படிருப்பதாகவும் - மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை  செல்போன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை  காப்பாற்றி வந்ததாகவும் - அவர் சிறைக்கு வந்தபிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும்  கூறியிருக்கிறார். அதைக்கேட்ட அசீமானந்தா சிந்திக்க தொடங்கினார் - அவரின்  மனசாட்சி 'அப்துல் கலீம்' போன்ற இளகிய மனம் படைத்த அப்பாவி இளைஞனின் சிறைத்தண்டனைக்கு காரணமாகிவிட்டோமே என்று  உறுத்த ஆரம்பித்துவிட்டது. 
மதக்காழ்ப்புணர்ச்சியோ - வெறுப்புணர்ச்சியோ காட்டாமல் - ஹிந்து சுவாமியான தனக்கு - அப்துல் கலீம்  செய்த பணிவிடைகளை எண்ணிப்பார்த்த சுவாமி அசீமனந்தா - மனம் வருந்தினார். தான் செய்த தவறுக்கு 'பிரயசித்தம்' தேடிக்கொள்வது' என்றும் - வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான உண்மைக்குற்றவாளிகள் தண்டனை பெற்றே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார்.  மேற்கண்ட சம்பவங்களை கடந்த டிசம்பர் 18 அன்று - டெல்லி மாஜிஸ்ட்டிரேட் முன்னிலை சுவாமி அசீமானந்தா அளித்த 42 பக்க வாக்கு மூலத்தில் கூறியுள்ளாராம்.
சுவாமி அசீமனந்தாவின் ஒப்புதல் வக்குமூலத்திற்கு மிகமுக்கிய கரணியாக விளங்கிய அப்துல் கலீம் பற்றி - பிரபல புலனாய்வு ஏடானா 'தெஹல்கா'  (படிக்க ) மட்டும் வெளியிட்டது ஆனால் பிரபல ஆங்கில தினசரிகளும் - தனியார் செய்தி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துவிட்டன.    

Central University Of Tamil Nadu (CUTN) Recruitment

Central University Of Tamil Nadu (CUTN) has announced and published advertisement at official website www.tiruvarur.tn.nic.in for recruitment of candidates for following jobs vacancies. Persons who are eligible and desirous for Central University Of Tamil Nadu Recruitment may download complete details and application form official websitewww.tiruvarur.tn.nic.in and apply before the last date.


Central University Of Tamil Nadu (CUTN)
Thanjavur Road, Tiruvarur – 610 001, Tamil Nadu
Vacancies for Non-teaching Positions
Notification No: CUTN – 3 (2) – 1/2011

More details about Central University Of Tamil Nadu (CUTN) Recruitment details
 1. Finance Officer : 01 Post
 2. Deputy Registrar : 02 Posts
 3. Assistant Registrar : 02 Posts
 4. Hindi Officer : 01 Post
 5. Section Officer : 02 Posts
 6. Assistant : 04 Posts
 7. Upper Division Clerk : 04 Posts
 8. Lower Division Clerk : 04 Posts
 9. Private Secretary : 03 Posts
 10. Personal Assistant : 01 Post
 11. Technical Assistant : 02 Posts
 12. Lab. Assistant : 02 Posts
 13. Assistant Librarian : 01 Post
 14. Junior. Professional Assistant : 01 Post
 15. Library Attendant : 02 Posts
 16. Lab Attendant : 02 Posts
Last Date for receiving application : 28.01.2011

 The filled in application wi th attested copies of the certificates for age proof, qualification,experience, community, non creamy-layer certificate, demand draft etc, should be addressed to the Registrar, Central University of Tamil Nadu, Thanjavur Road, Thiruvarur – 610 001

Important link: Advertisement  

More Information: For  complete information about Central University Of Tamil Nadu (CUTN) Recruitment 2011 like how to apply, selection procedure, how to apply and any other details please visit official website www.tiruvarur.tn.nic.inFor latest sarkari naukri updates and  Central University Of Tamil Nadu (CUTN) Recruitment 2011 notification direct into your email ID please

http://getsarkari-naukri.blogspot.com/

Thursday, January 6, 2011

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், "என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!" - என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம்.
அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள்.


அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே!


அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
 அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 - 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.

இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் சர்வதேச அளவில் சாதனைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி "அறிவைத்
தேடுதல்" எனும் அடிப்படை இங்கே நிருபணமாகிக் கொண்டுள்ளது.

ஆம்! கடந்த வாரத்தில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் இந்தப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி ஈரானியப் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றுள்ளனர். விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில்
கலந்து கொண்டனர்.

* சகோதரி மெஹ்ராஜ் கோல்கின்ஃபர் எனும் முஸ்லிம் பெண், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப்
பரிசை வென்றுள்ளது.

* சகோதரி சோனியா சப்ரீ அவர்களின் பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது.

* அதே சமயம் சகோதரி மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.

ஈரானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள்:
பன்னாட்டு இயற்பியல் ஒன்றியத்தால் (The International Union of Pure and Applied Physics - IUPAP) இவ்வருடத்திய சிறந்த இளம் விஞ்ஞானியாக டாக்டர். யாஸமென் ஃபர்ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 34-ஆவது சர்வதேச உயர் ஆற்றல் பெளதீக மாநாட்டில் High Energy Physics
(ICHEP2008) இதற்கான சாதனை விருதினை இவர் பெறவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 25 நாடுகளுடன் நடந்த போட்டியில் இரானின் முஸ்லிம் பெண்கள் சமர்ப்பித்தத் திட்டங்களில் வென்றவை பின்வருவாறு:
1. Mehrnaz Golchinfar: Power station without pollution for environment (Winner of the Special Jury Award)
2. Ladan Nakhaei, Saeideh Nooshzadeh and Naser Darijani: Laboratory washer device for washing non accessible points of the laboratory tools and devices.
3. Elena Horri, Mehrangiz Ebrahimi and Mohsen Horri: Washable polymer and elastic for x-ray absorption
4. Negar Mahmoodian: Automatic music stand
5. Marzieh Morselpour, Mohammad Ali jusefzadeh and Parvin Nejad Sarvari: Production of ointment and suppository of citrullus colocynthis extract to reduce blood sugar
6. Negar Molazadeh: Intelligent seat belt
7. Parvin Vasseghi, Anaheita Davoodi and Tahmasb Davoodi: Building energy management system (BEMS)
8. Soheila Kamrani and Saeed Naderian: Producing water color compounds special for use in water color painting technique on stone, as well as regular technique of water color prepared from pigments of fruits, herbal plants, food colors and powder paints
9. Sonya Saberi: (World Intellectual Property (WIPO) Award)
10. Fatemeh Soltanzadeh and Mojtaba Emamjome: The Optimization of Cement and Concrete with Usage of Oman Sea Chalky Conches
11. Samaneh Mollaghasemi, Mahtab Ahmadi and Mansoor Norooz Eidian: A device to relieve migraine pains.
12. Roghayeh Hashemi: Anti-Fertility effects of seed of cossypium herbaceum and ruta graveolens plants on adult male rats is regd
13. Hoda Jalali Nejad, Amir Jalali Nejad and Hamid Jalali Nejad: Recycling of polyethylene tare phthalate (PET) which used for water and soft drink
14. Maryam Eslami: An implement for reparation and surgery of osseous diseases in olecranon (nternational Federation of Inventors' Associations (IFIA) Award, also honored with the WIPO special emblem as the top laureate for her findings consistent with the treatment of bone and joint diseases at the 36th International Exhibition of Inventions held on April 2-6 2008,where she (photo to the right) won the first prize)
15. Mahnaz Saeedi Delcheh: Flat gelatins cover for shoes to attending high equilibrium and residence of foot ache
16. Zahra Sajjadi: Automatically system that change unpleasant air to pleasant air
17. Iman Kanani: Water Purifier/Softener
18. Sahar Sepehr: Robo School Police19. Maryam Noori: Robo traffic police20. Zeynab Abdolzahrai: Wireless Electric Skate Roller


அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகள் ஏதுமற்ற நிலையிலும், பல மேற்கத்திய நாடுகள் ஈரானின் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்கான மென்பொருள் / வன்பொருள் வாங்க பொருளியல் சார்ந்த அனுமதிகளை வழங்க மறுக்கும் சூழ்நிலைகளிலும் ஈரானின் விஞ்ஞான உற்பத்தித் திறன் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் அளிக்கும் தகவல்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோரில் 70% பெண்கள் ஆவர்.

இயற்பியல், கணிதம், மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் பல "முதன் முதலாய்" கண்டுபிடித்து சாதித்திருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் இல்லாத காரணங்களினால் இவர்களது கண்டுபிடிப்புகள், இவர்களது ஆய்வுகளைப் பின்பற்றும் மேற்கத்தியர்கள் 'கண்டுபிடித்த'தாக
அறிவிக்கப் படுகிறது.

உலகின் முதல் "பேட்டரி" தொழில்நுட்பத்தில் துவங்கி காற்றாலை மூலம் கொண்டு ஆற்றலைப் பெறுவது வரை மட்டுமில்லாமல் அல்ஜீப்ரா, வேதியியல், புவி ஈர்ப்பு விசை, ஒளியின் வேகம் ஆகிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்த ஈரான், பதிவேட்டில் தனது கண்டுபிடிப்பைப் பதிக்கத் தவறியதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளது.

காலம் கடந்து உணர்ந்தாலும், அதற்காகச் சோர்ந்து விடாமல் முயற்சி செய்து சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அரங்கில் தன்னை நிலை நிறுத்த ஈரான் முயன்று வருகிறது. நம்பிக்கை ஊட்டும் இத்தகைய விழிப்புணர்வுகள்தாம் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசியமான தேவைகளாகும்.

- அபூ ஸாலிஹா