Monday, November 8, 2010

முதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!
காலையில் எழுந்துகொள்ள, பொதுவாக எத்தனை மணிக்கு அலாரம் வைப்பீர்கள்?
மாலையில் நண்பர்கள் சந்திப்பு, அலுவலக பார்ட்டி போன்ற விசேஷ வைபவங்களைப் பொதுவாக எத்தனை மணிக்கு ஃபிக்ஸ் செய்வீர்கள்?
உங்களைச் சந்திக்க நேரம் கேட்பவர்களிடமோ அல்லது, ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையைப் பதிவு செய்வதாக இருந்தாலோ, நீங்கள் குறிப்பிடும் நேரம் என்னவாக இருக்கும்?
'7.00, 7.30 அல்லது 9.00, 9.30 அல்லது 5.00, 5.30 அல்லது 10.00, 10.30' என்பதாகத்தானே உங்கள் பதில் இருக்கும்! நான் இதைப்பற்றி ஒரு சர்வே செய்திருக்கிறேன். 90 சதவிகிதத்தினர் 7.00 அல்லது 7.30, 10.00 அல்லது 10.30 என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்தின் தொடக்கம் (10.00) அல்லது, அதன் அரை மணி நேரத்தைத் தான் குறிப்பிடுகிறார்கள் (10.30). ஒரு மணி நேரத்தில் அந்த இரண்டு தருணங்கள் மட்டும்த£ன் 'நேரம்' என்று குறிக்கப்பட்டு இருக் கின்றனவா? கடிகாரத்தின் முட்கள் அந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் தங்கித் தேங்குகின்றனவா? பிறகு ஏன், அந்த இரண்டு நேரங்கள் மட்டும் நம் மனதில் ஆழப் பதிந்து விட்டன? 'பத்தரை மணிக்கு வரப் பாக்குறேன். அப்படி இல்லைன்னா, பதினோரு மணிக்கு டாண்ணு வந்துடுறேன்!'
10.30-க்கும் 11-க்கும் இடையில் முழுதாக அரை மணி நேரம் கபளீகரம்! அந்த அரை மணி நேரத்தின் ஏதோ ஒரு நிமிடம்பற்றி கவனத்தில் கொள்வதே இல்லை. சிறு வயதில் இருந்தே அது இயல்பாகிவிடுவதால், அதை உடைத்து யோசிக்க மறுக்கிறது மனம். இதனால் என்ன நிகழும்? அரை அரை மணி நேரங்களாக முழுங்கிவிடுவதால், இறுதியில் அரக்கப் பறக்க ஓடிக்கொண்டு இருப்போம். அந்த அரை மணி நேர மனத் தடைகளை அகற்றினாலே ஒவ்வொரு நாளும் கணிசமாக நேரத்தைச் சேமிக்கலாம்!
இப்படித்தான்... நாம் கவனிக்க மறந்த, மறுக்கும் சின்னச் சின்ன சங்கதிகளில் இருந்துகூட நேரத்தைச் சேமிக்க வழி சொல்கிறார் இயன் கூப்பர். 'How To Be A Time Master' புத்தகத்தைப் படிக்க கொஞ்சமே கொஞ்சம் உங்கள் நேரத்தை 'முதலீடு' செய்வது, உங்கள் ஆயுளின் பல மணி நேரங்களை உங்களுக்குச் சேமித்துக் கொடுக்கும்!
*********************************************************************************************************************************

நேரமே வாழ்க்கை - இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்)

No comments:

Post a Comment