Monday, October 25, 2010

பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்

கடலூர்:(( JULY – 2010) சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25). சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள் பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் சுப்ரமணியன், பர்வானா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி M.PHIL படித்து வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல் தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து. ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.
என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment