Friday, October 1, 2010

நீண்ட நாள் வாழ வேண்டுமா? கை குலுக்குங்கள்..


நீங்கள் ஒரே நாளில் பலரோடு கை குலுக்க வேண்டியதாக உள்ளதுஆனால்இந்த கை குலுக்கலில் நீங்கள் ஆச்சரியப்படும் விஷயம் அடங்கியுள்ளது.ஆமாம்.. உங்களது கை குலுக்கலை வைத்து உங்களது ஆயுளை அறியலாம்என்பது ஆச்சர்யம்தானேலண்டனின் பல்கலை கல்லூரியின் மருத்துவஆராய்ச்சி குழுமத்தின் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி வழுவாக கைகுலுக்ககூடியவர்கள்இருக்கையிளிருண்டு வேகமாக எழுந்திரிக்க கூடியவர்கள் மற்றும்வேகமாக நடக்கவும்ஒற்றை காலில் நிற்கவும் இயன்றவர்கள் ஆகியோர்இவற்றை செய்ய இயலாத பிறரை விட அதிக ஆயுளை பெற்றுள்ளனராம்.

விரிவான ஆய்வு

டாக்டர் ராச்சேல் கூபர்அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த இந்தஆய்வானது மருத்துவ ஆய்வு குழுமத்தின் நிதி உதவியுடன் நீண்ட கால ஆயுள்மற்றும் வயதாவதை பற்றிய ஆய்வாகும்கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்களின்உடல் தகுதி மற்றும் இறப்பு விகிதத்தை கணகெடுத்த 33 ஆய்வுகளின்முடிவுகளை ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து  இத்தகைய முடிவுக்குவந்துள்ளனர்இதில் பங்குகொண்டோரில் பலர் 60  வயதை கடந்தவர்கள்என்பதும் இவர்கள் மருத்துவ மனை மற்றும் முதியோர் இல்லங்களில் வாழ்வதைவிட சராசரி மக்களோடு அதிகமாக கலந்து வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நெடுங்கால ஆய்வுகளில் ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவற்றை கண்டறிந்துள்ளனர்:

  • மிகவும் மெலிதாக கை குளுக்கொவோரிடயே, அதே வயது, பாலினம், உடல் அளவு கொண்ட வழுவாக கை குலுக்கும் பழக்கம் உடயவர்களைவிட விட 1.67 மடங்கு அதிகமாக மரண விகிதம் உள்ளது.

  • ஆய்வுக்குட்பட்டவர்களிலேயே மெதுவாக நடப்பவர்களின் இறப்பு விகிதமானது,  அவர்களிடையே அதிகம் வேகமாக நடப்பவர்களை விட 2.7 மடங்கு அதிகமாக உள்ளது.

  • இருக்கையிலிருந்து எழ அதிக நேரம் எடுத்து கொண்டவர்களிடையே, இருக்கையிலிருந்து வேகமாக எழும் இயல்பு கொண்டவர்களை விட இரு மடங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வு கட்டுரையானது பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி அன்றாட சராசரி செயல்பாடுகளின் அடிப்படையில்  ஒருவரது நலமும், நோயுருதலும் காணப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அடிப்படையிலான சோதனைகளின் மூலம் பலவீனமான பிரிவினரிடையே  நோய்கூறுகளை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிக்க இயலும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நமது தினசரி நடவடிக்கைகளில் எப்போது இத்தகைய பிரச்சினைகள் வெளிப்படும் என்று நாம் அறிய மாட்டோம். எனினும் அடுத்தமுறை நீங்கள் கை குலுக்கும் போதும், இருக்கையிலிருந்து எழும்போதும், உங்களது கை குலுக்கும் வலிமை, மற்றும் பிற செயல்களின் வேகத்தை கவனியுங்கள். இஸ்லாமும், முஸ்லிம்கள் கை குலுக்குவதை ஊகுவிக்கறது  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் தொழுகைகளை எடுத்துகொண்டாலும் இறைவனை தியானிப்பதின் மூலம் கிடைக்கும் மிக பெரும் மன அமைதியும், நிறைவும் ஒரு புறமிருக்க, தொழுகை ஒரு மிக சிறந்த உடற் பயிற்சியாகவும் திகழ்கிறது என்பதும் தெளிவு. மேலும் இது போன்ற ஆய்வுகள் படைத்த ஒரே இறைவனான அல்லாஹுவை புகழ்ந்து தவறாமல் தொழுவதின் மூலம் நமக்கு கிடைக்கும் உடல் மற்றும் மன பயிற்சிகளை நோக்கி நம்மை ஊக்கப்படுத்தும் என நம்பலாம்.
Source;  http://www.knowabouthealth.com/study-a-firm-handshake-linked-to-longer-life/6334/

No comments:

Post a Comment