Saturday, September 25, 2010

Dr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவைத்த உரையும்..

 

அஸ்ஸலாமு அழைக்கும்..

அப்துல்லாஹ் அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்ற பிறகு முதல் முதலாக (3/09/10)அன்றைய தினம் நாகூருக்கு வருகை தந்தார். இரவு 9:௦௦00 க்கு ஜாக் பள்ளியில் உரை நிகழ்த்துவார் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது
நாகூரின் சுத்து வட்டார ஊர்களில் இருந்தும் கூட பல சகோதர்கள் வந்து இருந்தனர்.


அதுபோல் முதலில் நாகூர் சீயா மரைக்காயர் தெரு - ஜாக் பள்ளியிலும் பிறகு நாகூர் முஹையதீன் பள்ளியிலும் உரை நிகழ்த்தினார்.

பல அலுவல்களுக்கு இடையில் உடல்நல குறைவையும் பொருட்படுத்தாமல் அழைப்பை ஏற்று வந்திருந்தார் Dr.அப்துல்லாஹ்.

மிக ஆவலுடன் எதிர்பார்த்த அவரின் உரை சரியாக இரவு 9 :20 க்கு ஜாக் பள்ளியில் ஆரம்பமானது.

மிக சாந்தமாக தனது உரையை ஆரம்பம் செய்தார்.. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் உரை நிகழ்த்தி அனைவரையும் கட்டி போட்டார். பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்...

தனது ஆரம்பகால வாழ்வை சுருக்கமாக விவரித்தார்.
இஸ்லாத்தை பிறருக்கு நாம் எத்திவைக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முஸ்லிகள் உலக ரீதியாக தங்களுக்குள்ளாகவே நான் நீ என்று போட்டி போடுவதை சொன்னார் மேலும் தொப்பி போடு என்று ஒருவரும் , போடவேணாம் வேண்டியதில்லை என்று மற்றொருவரும் , நெஞ்சில கைகட்டு ,நெஞ்சிக்கு கீழ கட்டு என்று மற்றொருவரும் மாக தன்னை குழப்புவதாக வருத்தப்பட்டார்.

இது போன்ற விஷயங்களுக்காக பிளவு பட்டு நிற்பதை கண்டு தேவை அற்றது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் அவனே கூலி கொடுப்பவன். நாம் பிளவு பட கூடாது.. பிறரின் குறையை ஆராய கூடாது.. ஒருவரின் தவறை திருத்த அழகான முறையில் எடுத்துரைக்க வேண்டும் தனக்கு மட்டும் தெரிந்தார் போல் பேச கூடாது என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

முக்கியமாக பாபரி மஸ்ஜிதை இடித்த இருவரின் நிலை பற்றிய அப்துல்லாஹ்வின் உரை சிலிர்க்க வைத்து...
அவரின் உரையில் இருந்து....

"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து
சென்றுள்ளார்கள்.

பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் இறை இல்லத்தை இடித்த இவர்கள் இரண்டு பேரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் தலைகீழாக போனது... இருவருக்கும் உச்சகட்ட பைத்தியம் பிடித்தது , பைத்தியம் என்றால் கடுமையானது தன்னை தானே நிர்வாணம் ஆக்கி கொள்வது , கண்ணில் படும் பெண்களின் ஆடைகளை கிழித்து உறவு கொள்ள முயற்சி செய்யும் அளவிற்கு கொடுமையாக இருந்தது., தனது தாயுடனே உறவு கொள்ள முயற்சி
செய்யும் கொடிய நிலைக்கு இவர்கள் ஆளாகி போனார்கள் (அல்லாஹு அக்பர் ).

இந்த இருவரின் குடும்பம்மும் நல்ல வசதி வாய்ப்பை உடையது. இந்த நோய்க்கு மருத்துவம் செய்ய பல இடங்களின் முயன்று அனைவரும் கைவிட அந்த இருவரின் பெற்றோரும் அமெரிக்காவில் உள்ள எனது மனதத்துவ ஆசிரியரை தொடர்பு கொண்டு மருத்துவம் செய்ய அழைக்க அவர் தற்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லி எனது மாணவர் இந்தியாவில் இருக்கிறார் அவரை அழைத்து பாருங்கள் என்று சொல்லிரிக்கிறார்.

அவர்கள் என்னை அழைக்க நான் அங்கு சென்று பார்த்தேன்.., (சுபஹானல்லாஹ்) இந்த நோயின் தன்மையானது சுமார் ஆறுமாத காலம் எடுத்துதான் இந்த நிலையை அடைய முடியும் . இது தான் அறிவியலின் நிலை ஆனால் இந்த இருவருக்கும் வந்திருப்பது ஆச்சரியமானது , மூன்று நாட்களில் இவர்களுக்கு இந்த நோய் உச்சத்தை அடைந்து விட்டது. இதற்க்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டேன்.

அவர்கள் என்னிடம் பாபரி மஸ்ஜிதை இடித்த பிறகுதான் இப்படி ஆகியது என்று சொன்னார்கள் ஆதலால் வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் பள்ளியில் இருக்கும் இமாம்களிடம் ஓதி பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

நான் அப்போது இஸ்லாமியனாக இருந்தவனில்லை எனினும் சும்மா சொல்லிட்டு வந்தேன்

ஆனால் நான் சொன்னதை மனதில் வைத்து டெல்லியில் பெரிய பள்ளியில் இமாமை சந்தித்து நடந்ததை அழுது புலம்பி சொல்லி இருகிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்.

இவர்கள் செய்த காரியத்திற்கு அல்லாஹ்வே தண்டனை வழங்கி உள்ளான் நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் , நானும் இவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் ஆனால் இவர்களுக்கு குணமானால் என்ன செய்வீர்கள் என்று அந்த இமாம் கேட்க,என்ன வேண்டாலும் செய்வோம் என்று சொல்லி இருகிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்..,

இமாம் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தில் இணைத்து விடுங்கள் என்று சொல்லி இருகிறார் அதை ஏற்றுக்கொண்டு பள்ளி வாசலில் அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கூறி உள்ளனர் அனைவரும்... அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளிஏறி வந்த உடனே
( சுபஹானல்லாஹ் - அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் )

தங்களின் நிர்வாண கோலத்தை மறைக்க தனது தந்தையின் தலை பேட்டாவை எடுத்து மறைதார்களாம் அந்த இருவரும்.-அல்ஹம்துலில்லாஹ்.

நான் இதை அந்த இமாம் இடத்திலையே நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.

தற்போது இருவரும் இஸ்லாத்தில் இணைந்து எந்த கையால் பள்ளி வாசலை இடித்தார்களோ அதே கையால் பல பள்ளிவாசலை கட்டி வருகிறார்கள் , இங்கு கூட சேலத்தில் ஒரு பள்ளி வாசல் கட்டி வருகிறார்கள். நான் இஸ்லாத்திற்கு வந்த செய்தி அறிந்து என்னை இருவரும் நேரடியாக சந்திக்க வந்தனர் என்று கூறி முடித்தார் dr .அப்துல்லாஹ் அவர்கள்.

பின்னர் முஹியதீன் பள்ளியில் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்..

அதில் நாம் வாழ்வில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை அதிக படுத்த வேண்டும் என்றும் , பிறருக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காக அமல் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மேலும் தான் எந்த இயக்கத்தையும் சாராதவன் - தான் எல்லோருக்கும் பொதுவானவன் என்று தன்னுடைய நிலைபாட்டை கூறி தனது உரையை நிறைவு செய்தார். ( அல்ஹம்துலில்லாஹ் )

அல்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் , உடல் நலத்தையும் , இஸ்லாத்தை எத்திவைக்க கூடிய பணியை நிரம்ப செய்ய நாம் அனைவரும் துஆ செய்வோமாக !

No comments:

Post a Comment