Sunday, September 19, 2010

செல்போனில் ரகசியமாக பேசுகிறீரா? கள்ளக்காதலாக மாறலாம்.. உஷார்பாலியல் மருத்துவர் எச்சரிக்கை

படித்தவர் & படிக்காதவர், ஏழை & பணக்காரர், கிராமம் & நகரம் என எந்த வேறுபாடும் இல்லாமல் நடக்கிறது கள்ளக்காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படும் குற்றங்கள். ஆனாலும், வெளிநாட்டு கலாசாரம் அதிகரித்து வரும் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் கடந்த காலங்களைவிட தற்போது இது அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ‘கள்ள’ காதல் என்ற பெயர் சூட்டிய சமூகம்.. எந்நேரமும் எங்கிருந்தும் பேச முடியும் என்ற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிற செல்போன்.. கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரிப்பில் இந்த இரண்டுக்கும் முக்கிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.
பணம் தேடி ஓய்வின்றி ஓடும் தம்பதிகள் பேசக்கூட நேரம் இருப்பதில்லை. அல்லது ஒதுக்குவதில்லை. இதனால், அன்பும் பாசமும் கிடைப்பதில்லை.
முழுவதும் படிக்க....

கிடைக்கும் என்று நம்புகிற இடத்தை மனம் நாடுகிறது. தனக்கு ஏற்ற வாழ்க்கையை தேடிக்கொள்ள சட்டரீதியான வழிகள் இருந்தாலும், பரபரப்பிலும் பதற்றத்திலும் இருக்கும் மனம் அவற்றை யோசிப்பதில்லை. பிரச்னையை தீர்ப்பது குறித்து யோசிக்காமல், பிரச்னை செய்பவரை தீர்க்கும் முடிவுக்கு வருகிறது. குற்றங்கள் உருவாகின்றன.
இதுகுறித்து ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை இயக்குனரும், பாலியல் மருத்துவ ஆலோசகருமான டாக்டர் காமராஜ் கூறியதாவது:
தற்போதுள்ள சூழ்நிலையில் கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குள் உள்ள தகவல்தொடர்பு குறைவாக உள்ளது. மனைவி அவரது வேலையை பார்ப்பார். கணவன் டிவி அல்லது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து விடுகிறார். மனம் விட்டு பேசுவது, சோகம் பரிமாற்றம், அன்பு, ஆதரவு செலுத்துதல் இதற்கெல்லாம் நேரமில்லை.
கணவன், மனைவி இருவரும் வாரம் குறைந்தது 15 மணி நேரமாவது தனிமையில் பேசிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் சிக்கல் வரும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. .
மனைவியிடம் அன்பாக பேச வேண்டும். அன்பாக வேலை வாங்க வேண்டும். இதைச் செய், அதைச் செய் என்று கட்டளையிடக் கூடாது. மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்று மட்டம் தட்டி பேசுவது, 3&வது நபர் முன்பு கிண்டல் செய்வது, கோபப்பட்டு அடிப்பது ஆகியவற்றை செய்தால் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பு ஏற்படும்.
கணவன் & மனைவி இடையே எந்த சூழ்நிலையிலும் ஒளிவுமறைவு இல்லாத தொடர்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்னை வரும். யாருடன் செல்போனில் பேசுகிறோம், யாருக்கு இமெயில் அனுப்புகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் மறைக்கக் கூடாது. கணவனுடனோ, மனைவியுடனோ பிரச்னை என்றால் அவருடன் பேசி மட்டுமே அதை சரிசெய்ய வேண்டும். வெளிநபரிடம் ஆறுதல் தேட முயன்றால் அவருடன் நெருக்கம் ஏற்பட்டு கணவன் & மனைவி உறவு பாதிக்கப்படும். இவ்வாறு டாக்டர் காமராஜ் கூறினார்.
நன்றி : தினகரன்


1 comment:

  1. இவைகள் யாவும் பத்திரிக்கை பரபரப்பு வியாபரமே. இஸ்லாம் சொல்லும் தனிமனித ஒழுக்கமே நன்மை பயக்கும். இப்படியான copy & pasteக்கெல்லா நிறையவே இருக்கிறார்கள் அந்தக் கூட்டத்தில் சேராமல் Unityன்னு தலையில வைத்துக் கொண்டு dignity இழக்க வேண்டாம்

    ReplyDelete