அஸ்ஸலாமு அலைக்கும்,,,
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள், சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல், கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன. குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment