கப்ரிலிருந்து நபிகள் நாயகம் பணத்தை கொடுத்தாரா?
ஹஜ்ஜூக்குச் சென்ற ஒருவர் பசியேற்பட்ட போது நபியவர்களிடம் நான் உங்கள் விருந்தாளி என்று கப்ரில் சொல்லி விட்டு உட்காந்திருக்க கப்ரிலிருந்து நபியவர்களின் கைவெளிப்பட்டு ஒரு பண முடிப்பைக் கொடுத்தாகவும் அதிலுள்ள பணத்தின் பரக்கத் காரணமாக நீண்ட நாட்களுக்கு அதை செலவுசெய்த கதையைப் பாருங்கள் (பளாயிலுல் ஹஜ் 925)
கப்ரிலிருந்து நபிகள் நாயகம் போர்வை கொடுத்தாரா?
நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ஒருவருக்குப் போர்வை கொடுத்த கதை பார்க்க: ஹஜ்ஜின் சிறப்பு944.
கப்ரிலிருந்து நபிகள் நாயகம் ரொட்டி கொடுத்தாரா?
நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ரொட்டி கொடுத்த சம்பவம் பார்க்க வேண்டுமா? பாருங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 797
கப்ரிலிருந்து நபிகள் நாயகம் கிச்சடி குழப்பு சமைத்தாரா?
மற்றுமொருவர் நபியவர்களிடம் பசிக்கு உணவளிக்குமாறு பிரார்த்தித்ததும் கிச்சடியும் குழம்பும் கொடுத்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பின் புரட்டுங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 945
கப்ரிலிருந்து நபிகள் நாயகம் தண்ணீர் கொடுத்தாரா?
ஷாஹ் வலிய்யுல்லாஹ் ஒருமுறை நபியவர்களிடம் உணவு கேட்டு முறையிட்ட போது நபியவர்கள் கனவில் சுவையான சோறும் நெய்யும் அடங்கிய மரவையைக் கொடுத்தாகவும் பின்னர் நீர் புகட்டியதாகவும் விழித்துப் பார்த்த போது கையில் உணவின் நெய்மணம் வீசியதாகவுமுள்ள சம்பவத்தைப் பார்க்க ஸதகாவின் சிறப்பு பக்கம் 799
மய்யித்தை வழிபட்டால் பரக்கத்து வருமா?
மௌலானா ஜக்கரிய்யா சொல்கின்றார்கள். ..
‘கப்றிலுள்ள பெரியார்களுக்கு நல்லமல்களைச் செய்து அனுப்புவதில் அதிக கவனஞ் செலுத்துங்கள். ஏனெனில் நீங்கள் இப்படிச் செய்யும் போது கப்ராளிகளுடைய றூஹூகள்உங்களின் பக்கம் திரும்பும் அவற்றிலிருந்து பல பரக்கத்துக்களும் உதவிகளும் உங்களுக்குஉண்டாகும். (தீஸ் மஜாலிஸ் 211)

அவ்லியாக்களை வழிபட வலியுறுத்தம் தப்லீக் தாலீம்
மற்றுமொரு இடத்தில். .. அவ்லியாக்களுடைய கப்ருகளைத் தரிசித்து அதன் மூலம் ஏதேனும் உதவிகளை ஒருவர் பெற்றால் அது தான் பைஅத் செய்திருக்கும் குருநாதர் - ஷேக்கிடமிருந்தேஉண்டானது என எண்ண வேண்டும். ஏனெனில் அந்த அவ்லியாவின் கப்ரிலிருந்து கிடைத்தபரக்கத் இந்த ஷேய்க்கின் ஊடாகவே கிடைத்திருக்கின்றது. (ஸக்காலத்துல் குலூப் 137)
கப்ரில் கிதாபுகளை வாசிக்க இயலுமா?
ஸவானிஹூ முஹம்மத் எனும் தப்லீக் பெரியாரின் நூலொன்றில் உள்ளதாவது. .. ‘ஜக்கரிய்யா மௌலானா அவர்களது சீடர்களில் ஒருவர் ஷேய்க் கன்கோயி அவர்களின் கப்ரைத் தரிசித்தார். அப்போது ஷேக் அவர்கள் கப்ரினுள் ‘கவ்கப் துர்ரிய’; எனும் கிதாபை வாசித்துக் கொண்டிருக்கக்கண்டார். அதே போல் கன்கோயி அவர்கள் மரணித்த வேளை செய்யித் முஹம்மத் என்பவர் அவர்களது கப்ருக்கு அருகிலேயே முறாக்கபாவில் இருந்து கொண்டிருந்தார்கள். (ஸவானிவ் முஹம்மது யூஸூப் 135)
மரண நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க இயலுமா?
தான் மரணிக்கும் நேரத்தை முன்கூட்டியே சொன்ன பெரியார்கள்.
யஃகூப் அஸ்ஸனூஸிய் சொன்னதாக ஜக்கரியா மௌலானா சொல்கின்றார்கள். ‘எனது சீடர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து நான் நாளை ளுஹருக்குப் பின் மரணிப்பேன் என்றார். மறுநாள் ளுஹர் நேர மானதும் சென்று கஃபாவைத் தவாபு செய்தார். அதன் பின் சொன்னது போன்றே மரணித்து விட்டார். நானே அவரைக் குளிப்பாட்டி கபனும் செய்தேன். கப்றுக்குள் அவரை வைத்த போது கண்களைத் திறந்து விட்டார். நானோ ஆச்சரியத்துடன் மரணித்ததன் பின் எப்படி உயிர் பெற்றாய்? என்றதும் ஆம் நான் உயிருடன் தான் இருக்கின்றேன் அல்லாஹ்வின் மீது காதல்வைத்திருக்கும் எவரும் மரணிப்பதில்லை என்றார். (ஸதக்காவின் சிறப்பு 657)

தாயின் மரணத்தை முன்கூட்டி அறிவிக்க இயலுமா?
இது போன்றே ஜக்கரிய்யா மௌலானாவின் தாயும் சிறிய தந்தையும் தாம் மரணிக்கும் நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக் கூறியதாகவும் அதே நேரத்தில் சொன்னபடிமரணமடைந்ததாகவும் சொல்லும் அதிசய நிகழ்ச்சி. பார்க்க : (வழாயிபு றமழான் 22)
அனைத்து ஆதாரங்களும் ஸ்ரீலங்கா தப்லீக் ஜமாஅத் என்ற இணைதளத்தில் கிடைத்தது அவர்களுக்கு நன்றி!
அன்புள்ள அபூஅஸீலாவே இப்போது தப்லீக் ஜமாஅத்தை பற்றி கூறுமய்யா? உங்க பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கிட்டு இருக்கேன்!
தவ்ஹீதை எத்திவைக்கும் எங்களுக்கு எல்லாம் பித்துபிடித்து போச்சு அதனாலத்தான் ஜமாலிய எதிர்க்கிறோம், தப்லீக் ஜமாஅத்தை எதிர்க்கிறோம் ஏன்னா நாம எல்லாம்பைத்தியக்கரானுங்குல்ல!
பைத்தியக்காரனுங்க தான் யாருக்கும் பயப்படமாட்டாங்க உண்மையை ஒழுங்காக, தெளிவாக உளருவானுங்க இந்த உண்மையை பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யும் வைத்தியக்காரன் கிட்ட கேளுங்கய்யா? கேளுங்க!
--
கப்ருவணங்கிகள் உங்களுக்கு ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் கத்தம் ஃபாத்திஹா மற்றும் இன்னபிர அநாச்சாரங்களை தடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment