மத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் துறை நேற்று அறிவித்தது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி,
கல்லூரி பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. 2010-2011 ம் கல்வி ஆண்டில் அரசால் அங்கீகரிகப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மாணவ- மாணவிகள் உதவி தொகை பெற விண்ணபிக்கலாம்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/- மும் முதுகலை படிப்பு படிக்கும் போது மாதம் ரூபாய் 2000/- மும் வழங்கப்படும். மருத்துவம் மற்றும் எஞ்சினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பாக இருந்தால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/-மும், எஞ்சிய ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 2000/-மும் பெறலாம் . ஒரு கல்வி ஆண்டில் பத்து(10) மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
மாநில பள்ளி தேர்வு வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4883 ஆகும். இதில் 50% மாணவர்களுக்கும், 50% மாணவிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட +2தேர்வில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 4,50,000குள் இருக்க வேண்டும் .
+2 தேர்வு எண்ணை தேர்வுத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பதை டவுன்லோட் செய்ய முடியும். விண்ணப்பதை தேதி முதல் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் இம்மாதம் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இணை இயக்குனர்(மேல்நிலை)
அரசு தேர்வுகள் இயக்கம்
டி.பி.ஐ வளாகம்
டி.பி.ஐ கல்லூரி சாலை,
சென்னை-600 006
அவ்வாறு அனுப்பும் தபாலின் மேல் ” கல்லூரி -பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டம்-” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தபால் துறை மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment