Thursday, January 13, 2011

சுவாமி அசீமனந்தாவின்  மனம் மாற்றிய அப்துல் கலீம்:
கடந்த 2007-ம் ஆண்டில் 68 பேரின் உயிரைப் பலிகொண்ட  சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்  ரயில் குண்டு வெடிப்பு சம்பவம்  நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மாலேகன் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தை - நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் அப்துல் கலீம் என்ற 21 வயது முஸ்லிம் வாலிபர் என்பதை எத்தனை பேர் அறிவோம்?.  
சுவாமி அசீமானந்தா நவம்பர் 2010-ல் மக்கா மஸ்ஜித் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர மநிலம் ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்குடா மாவட்ட சிறைச்சலையில் அடைக்கப்பட்ட பொழுது அந்த வியத்தகு சம்பவம் நடந்தது. அவர் அடைக்கப்பட்ட சிறையில்தான் - மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட  அப்துல் கலீமும் அடைக்கப்பட்டிருந்தார். ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பரிச்சயம் நட்பாக மாறியது. 
அப்துல் கலீம் - வயோதிகரான சுவாமிக்கு தேவையான உணவு- குடிநீர் பொன்றவைகளை பெற்றுத் தந்து  உதவி வந்தார். அவ்வாறு உதவி வந்த இளைஞனிடம் ஏதேச்சையாக ஒருநாள் கலீமின் சிறைத்தண்டனைக்கு காரணம் என்னவென்று சுவாமி ஒருநாள் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞன் அளித்த பதில்தான் - சங்பரிவாரால் மழுங்கடிக்கப்பட்ட 'மனிதநேய' உணர்வை மீண்டும் அந்தச்சுவாமியில் மனதில் கிளர்ந்தெழச் செய்தது.
அப்துல் கலீம், தான் கடந்த ஒன்றரை அண்டு காலமாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டு -  கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படிருப்பதாகவும் - மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை  செல்போன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை  காப்பாற்றி வந்ததாகவும் - அவர் சிறைக்கு வந்தபிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும்  கூறியிருக்கிறார். அதைக்கேட்ட அசீமானந்தா சிந்திக்க தொடங்கினார் - அவரின்  மனசாட்சி 'அப்துல் கலீம்' போன்ற இளகிய மனம் படைத்த அப்பாவி இளைஞனின் சிறைத்தண்டனைக்கு காரணமாகிவிட்டோமே என்று  உறுத்த ஆரம்பித்துவிட்டது. 
மதக்காழ்ப்புணர்ச்சியோ - வெறுப்புணர்ச்சியோ காட்டாமல் - ஹிந்து சுவாமியான தனக்கு - அப்துல் கலீம்  செய்த பணிவிடைகளை எண்ணிப்பார்த்த சுவாமி அசீமனந்தா - மனம் வருந்தினார். தான் செய்த தவறுக்கு 'பிரயசித்தம்' தேடிக்கொள்வது' என்றும் - வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான உண்மைக்குற்றவாளிகள் தண்டனை பெற்றே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார்.  மேற்கண்ட சம்பவங்களை கடந்த டிசம்பர் 18 அன்று - டெல்லி மாஜிஸ்ட்டிரேட் முன்னிலை சுவாமி அசீமானந்தா அளித்த 42 பக்க வாக்கு மூலத்தில் கூறியுள்ளாராம்.
சுவாமி அசீமனந்தாவின் ஒப்புதல் வக்குமூலத்திற்கு மிகமுக்கிய கரணியாக விளங்கிய அப்துல் கலீம் பற்றி - பிரபல புலனாய்வு ஏடானா 'தெஹல்கா'  (படிக்க ) மட்டும் வெளியிட்டது ஆனால் பிரபல ஆங்கில தினசரிகளும் - தனியார் செய்தி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துவிட்டன.    

No comments:

Post a Comment